எள் துவையல் -2

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

எள்ளு - 50 கிராம்
மிளகாய் வற்றல் - 6
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு - கால் கரண்டி


 

எள்ளை நன்கு கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும்.
வாணலியில் சுத்தம் செய்த எள்ளைப் போட்டு வறுத்து வைக்கவும்.
வேறொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய் வற்றலை போட்டு நன்கு வறுக்கவும்.
மிக்ஸியில் எள்ளு, மிளகாய் வற்றல், உப்பு, புளி சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
எள்ளு பொடி உடல் நலத்திற்கு நல்லது, சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்.


மேலும் சில குறிப்புகள்