தேங்காய் தக்காளி சட்னி

தேதி: December 16, 2007

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரைக்க வேண்டியவை:
தேங்காய் துருவல் - 3/4 கப்
தக்காளி - ஒன்று
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - ஒன்று
தாளிக்க :
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு, கறிவேப்பிலை


 

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து ஊற்றவும்.
இட்லிக்கு, தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையான சட்னி. எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யும் சட்னி.


மிளகாய் தூளுக்கு பதில் வரமிளகாயும் சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நீங்கள்ம் உங்க குட்டி ராணியும் எப்படி இருக்கீங்க? மேடம் இன்னக்கி இந்த சட்னி செய்யலாம்னு பார்த்தேன் ஆனால் இதில் மிளகாய் தூள்ன்னு கொடுத்துருக்கீங்க. அது மிளகாய் தூளா இல்ல மிளகாயா? மிளகாய் தூள் போட்டா அந்த வாடை வராதா கொதிக்க வைக்கவும் சொல்லல அதான் உங்க கிட்ட கேட்டுட்டு செய்துக்கலாம்னு விட்டுட்டேன். சில பேர் தாளிக்கும் போது அரைத்த சட்னிய அப்படியே அந்த சட்டியில் ஊற்றி கொதிக்க வைப்பாங்கள்ல அதுப் போல.

...இரண்டும் செய்வேன்..வரமிளகாயும் போடுவேன்....என் பக்கத்து வீட்டினர் மிளகாய்த் தூள் போட்டு செய்தார்கள் பார்க்க நல்ல சிவப்பாகவும் சுவையாகவும் இருந்ததால் அதன் பின் நானும் அப்படிYஎ செய்கிறேன்..இல்லை பச்சை வாடை வராது..வேண்டுமென்றால் நீங்களும் அப்படி செய்யலாம்..நான் கொதிக்க விட மாட்டேன் தாளித்த சட்டியிலேயே தீயை அனைத்து விட்டு சட்னி ஊற்றி லேசாக ஓரம் கொதிக்கும் அப்படியே பரிமாறிவிடுவேன்..நீங்கள் வரமிள்காய் போடுங்கள்..ஆனால் கலர் கம்மியாக தெரியும்
குட்டி ராணி ஒரே அடம்பிடிக்கிரா.1 வாரமாக தான் டூத் பேஸ்ட் உபயோகிக்கிறேன் அவளுக்கு...அன்றிலிருந்து தினம் பல் தேய்க்கும் மிட்டாய் வேனும்னு அழுகை

ஓ.கே நான் செய்து பார்க்கிறேன் மிளகாய் தூள் சேர்த்து. முதலில் அப்படி தான் எல்லா குழந்தைகளுக்கும் அந்த டேஸ்ட் பிடிச்சிருது இல்ல. வேற எதுலயாவது டைவர்ட் பன்னிவிடுங்க மாறிடுவா. நானும் அப்படி தான் சின்ன வயசில். பொய் சொல்லாதீங்க நீங்க மட்டும் பேஸ்டே சாப்பிட்டதில்லையா.