கத்தரிக்காய் துவையல் -3

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கத்தரிக்காய் - 2
உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய்வற்றல் - 2
புளி - ஒரு கொட்டைப்பாக்கு அளவு
உப்பு - கால் தேக்கரண்டி
பெருங்காயம் - சிறுதுண்டு


 

கத்திரிக்காயை அடுப்பில் காட்டி வாட்டிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய்வற்றல், பெருங்காயம் இவற்றை வறுத்துக் கொள்ளவும்.
இவையனைத்தையும் மிக்ஸியில் போட்டு புளி, உப்பு சேர்த்து அரைத்து பிறகு அதனுடன் கத்தரிக்காயையும் வைத்து அரைத்துக் கொள்ளவும். சற்றே கொரகொரப்பாக அரைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்