கல்கண்டு சாதம்

தேதி: December 17, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - 400 கிராம்
கல்கண்டு - 400 கிராம்
பால் - ஒரு லிட்டர்
நெய் - 100 மி.லி
முந்திரி - 10
உலர்ந்த திராட்சை - 10 கிராம்
ஏலக்காய் - 8


 

அரிசியை கழுவி பாலுடன் சேர்த்து குக்கரில் 3 விசில் வைத்து குறைந்த தீயில் 10 நிமிடம் வைத்து இறக்கவேண்டும்.
ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு முந்திரி, திராட்சை போட்டு வறுத்து அதே கடாயில் தூளக்கிய கல்கண்டு 1/2 கிளாஸ் தண்ணீரில் காய்ச்சி, சாதத்தில் போட்டு தூளக்கிய ஏலக்காயும் சேர்த்து மீதி நெய் ஊற்றி கிளறவும்.


மேலும் சில குறிப்புகள்