கறிவேப்பிலை துவையல் -2

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

கறிவேப்பிலை - 200 கிராம்
மல்லி விதை - ஒரு மேசைக்கரண்டி
துவரம் பருப்பு அல்லது உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
சிவப்புமிளகாய் - 5
பூண்டு - 3 பல்
உப்பு - சிறிது


 

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கறிவேப்பிலையை போட்டு நன்கு வதக்கி வேறு பாத்திரத்தில் கொட்டி விடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, மல்லி இரண்டையும் சேர்த்து வறுக்கவும்.
கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு, இவற்றுடன் பூண்டு, புளி, உப்பு, மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்து தாளித்து வைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்