வடை கறி

வழங்கியவர் : Jaleela Banu
தேதி : திங்கள், 17/12/2007 - 13:56
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- முதலில் வடைக்கு:
- கடலை பருப்பு - ஒரு டம்ளர்
- காய்ந்த மிளகாய் - இரண்டு
- இஞ்சி - ஒரு துண்டு
- உப்பு - தேவைக்கு
- வடை கறி தாளிக்க:
- எண்ணெய் - மூன்று தேக்கரண்டி
- பட்டை - இரண்டு அல்லது மூன்று சிறு துண்டு
- சோம்பு - அரை தேக்கரண்டி
- வெங்காயம் - மூன்று
- தனியாத் தூள் - அரை தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கு
- மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
- கறிவேப்பிலை, கொத்தமல்லி - கொஞ்சம்
- தக்காளி - பாதி
- அரைக்க வேண்டியது:
- பச்சை மிளகாய் - நன்கு
- சோம்பு - ஒரு தேக்கரண்டி
- ஒரு வெங்காயம், கறிவேப்பிலையை வடை மாவில் சேர்த்து கலந்து வடையாக பொரித்து பொரித்ததை உதிர்த்து கொள்ளவும்.
- எண்ணெயை காய வைத்து பட்டை, அரை தேக்கரண்டி சோம்பு போட்டு பொடியாக வெங்காயத்தை நறுக்கி போட்டு வதக்கவும், வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் அரை தேக்கரண்டி போட்டு கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தனியாதூள், மஞ்சள் துள், உப்பு போட்டு தக்காளி சேர்த்து வதக்கவும்.
- பச்சைமிளகாய், சோம்பை அரைத்து வதக்கியதில் ஊற்றவும்.
- தண்ணீர் இரண்டு டம்ளர் ஊற்றி கொதிக்க விட்டு உதிர்த்து வைத்துள்ள வடையையும் போட்டு நல்ல கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.
- சோம்பும், பச்சைமிளகாயும் அரைத்து ஊற்றியதில் வாசனை தூக்கலாக தோசைக்கு வைத்து சாப்பிட்டால் எத்தனை தோசை சாப்பிட்டோம் என்பது நமக்கே தெரியாது.
Note:
வடை பொரிப்பது ஒரு சுலபமான வழியும் உண்டு. எப்படியும் உதிர்த்து தான் போடப்போறோம் அதை தவ்வாவில் எண்ணெயை ஊற்றி அடைக்கு ஊற்றுவது போல் மொத்தமாக அள்ளி வைத்தும் திருப்பி போட்டும் உதிர்த்து விடலாம்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
ஜலீலா பானு, உங்களின் சமையல் குறிப்புக்கு விசிறி நான். உங்களின் குறிப்பில் சிக்கன் மற்றும் பல சமையல் செய்துள்ளேன். வீட்டில் அனைவரிடதிலும் பாராட்டு பெற்றுள்ளேன். இன்றைக்கு வீட்டில் வடைகறி செய்தேன். யாரும் நம்பவில்லை. ஹோட்டலில் வாங்கியது போல் இருந்தது என செம பாராட்டு. நன்றி.
வணக்கம்,
கர்ப்பத்திற்கு முன் எடுத்துகொள்ளும் சத்தாண உணவை சொல்லவும்.