கொத்தமல்லி துவையல்

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மல்லிதழை - சிறு கட்டு
மிளகாய்வற்றல் - 6
பெருங்காயம் - மிளகளவு
புளி - சிறிது
கறிவேப்பிலை - 2 கொத்து
உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
பூண்டு - 3 பல்
உப்பு - தேவைக்கேற்ப


 

மல்லித் தழையை ஆய்ந்து கொண்டு கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் பெருங்காயம், உளுத்தம் பருப்பு, வற்றல் போட்டு தாளித்துக் கொள்ளவும்.
அதனுடன் கழுவி வைத்த கொத்தமல்லித் தழையைப் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
மிக்ஸியில் கொத்தமல்லி, வறுத்து வைத்தவை, மற்றும் பூண்டு, புளி, உப்பு சேர்த்து அரைத்து கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து அதை அரைத்த துவையலுடன் சேர்த்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்