கடா பிரசாதம்

தேதி: December 17, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி மாவு -- 1/2 கிலோ
பசும் பால் -- 3 லிட்டர்
நெய் -- 1 1/2 கிலோ
மண்டை வெல்லம் -- 1 1/2 கிலோ (பொடித்துக் கொள்ளவும் )
ஏலக்காய் -- 10 என்னம் (பொடித்துக் கொள்ளவும் )


 

பாலில் வெல்லத்தை போட்டு கரைத்துக் கொள்ளவும்.பின் வடிகட்டி தூசி இருந்தால் நீக்கி விடவும்.
இந்த கலவையுடன் பச்சரிசியை சேர்த்து கிளறி அதை ஒரு வெண்கல பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து கலவையை கொதிக்க விடவேண்டும்.
ஓரளவு வெந்தபின் நெய்யை முழுதுமாக விட்டு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
நன்றாக வெந்த பின் நெய் மேலே மிதக்கும். அதை கரண்டியால் அள்ளி கிண்ணத்தில் வைக்கவும்.(இதை மற்ற வீட்டு உபயோகத்திற்கு பயன் படுத்தலாம்)

அதன் பின் ஏலக்காய் பொடித்ததை தூவி,கிளறி இறக்கி பரிமாறலாம்.
கடா பிரசாதம் ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

கண்டுப்பிடிச்சிட்டீங்கள் கோதை? இங்க மேலே இருக்கு பாருங்க.

ரொம்ப நன்றி மாலதி மேடம், நான் இப்பதான் ஜலீலா மேடமோட சப்போட்டா ஜூஸ் எப்படி செய்வதுன்னு படிச்சிட்டு இருந்தேன் அதுக்குள்ள நீங்களே தேடி கொடுத்துட்டீங்கள thanku u very much