நேந்திரங்காய் தோல் கறி

தேதி: December 18, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிறிய துண்டுகளாக நறுக்கிய நேந்திரங்காய் தோல் - 2 கப்
புளி - எலுமிச்சம்பழ அளவு
தேங்காய் - 1/2 மூடி
காய்ந்த மிளகாய் - 4
மஞ்சள் பொடி - 2 சிட்டிகை
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்


 

தோல் துண்டுகளை உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
புளியை கெட்டியாகக் கரைத்து வடிகட்டி வெந்த தோலுடன் சேர்க்கவும்.
தேங்காய், மிளகாய், கறிவேப்பிலை மூன்றையும் தண்ணீர் சேர்க்காமல் பொடித்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடித்ததும் பெருங்காயப் பொடி, உளுத்தம் பருப்பு சேர்த்து வறுபட்டதும் வெந்த தோலை சேர்த்து வதக்கவும்.
தேங்காய், மிளகாய் கலவையை சேர்த்து வதக்கி எடுத்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்