உருளை மசாலா சிப்ஸ்

தேதி: December 18, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக் கிழங்கு - 1/4 கிலோ
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
புளி - எலுமிச்சை அளவு
உப்புத் தூள் - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை - சிறிது


 

உருளைக்கிழங்கை தோல் சீவி மெல்லிய துண்டுகளாக நீளவாட்டில் நறுக்கவும்.
வெந்தயம், பெருங்காயம், மிளகாய், கடுகு ஆகியவற்றை வறுத்து அரைக்கவும்.
அத்துடன் புளியையும் சேர்த்து அரைக்கவும்.
உருளைக்கிழங்கு துண்டுகளை எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும்.
உப்புத் தூள், அரைத்த கலவையை சேர்த்துக் கலக்கவும்.
கொத்தமல்லித்தழையைத் தூவவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மாமி நலமா?
நேற்று "உருளை மசலா சிப்ஸ்" செய்தேன். மிகவும் நன்றாகயிருந்தது. என் மகன் விரும்பி சாப்பிட்டான்.

அன்புடன்:-).....
உத்தமி:-)