கறிக்குழம்பு - 2

தேதி: December 18, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கறி - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 6
மிளகாய்பொடி - 4 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 6 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி - அரை அங்குலம்
கசகசா - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - 4 சில்
புளி - நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - 4 தேக்கரண்டி
தாளிக்க;
பட்டை - ஒன்று
கிராம்பு - ஒன்று
இலை - சிறிது
சோம்பு, சீரகம் - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி


 

சீரகம், சோம்பு, மஞ்சள் தூளுடன் சேர்த்து அரைக்கவும். பாதி அரைத்தவுடன் இஞ்சி, 5 பல் பூண்டு, 5 சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்கவும்.
குக்கரில் கறியை கழுவி போட்டு அரைத்த மசாலா, மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி சேர்த்து அரிசி கழுவிய தண்ணீரில் 3 கிளாஸ் ஊற்றி உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கீறிய பச்சை மிளகாய் போட்டு கிளறி மூடி 7 விசில் வைத்து சிறு தீயில் 15 நிமிடம் வைக்கவும்.
வெந்தவுடன் வேறு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை போட்டு 5 சின்ன வெங்காயத்தை நறுக்கி போட்டு கறிவேப்பிலை சேர்த்து குக்கரில் போட்டு, புளியை 1/2 கிளாஸ் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும்.
தேங்காயுடன் கசகசா, பூண்டு பல் 2 சேர்த்து அரைத்துபோட்டு கொதித்தவுடன் இறக்கவும்.


அரிசி கழுவிய கழனி தண்ணீரில் செய்யும் குழம்பு மிகவும் சுவையாய் இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்