தேங்காய் துவையல் -2

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

தேங்காய் - ஒன்று
பச்சைமிளகாய் - 10
பெருங்காயம் - பாக்களவு
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
புளி - நெல்லிக்காயளவு


 

தேங்காயைத் துருவி வாணலியில் போட்டு தண்ணீர் சுண்டி மொறுமொறுப்பாக ஆகும் வரை வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி பெருங்காயம், உளுத்தம் பருப்பு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி வைக்கவும்.
அதனுடன் உப்பு, புளி சேர்த்து வதக்கி வைத்த தேங்காயை போட்டு தண்ணீர் விட்டு அரைக்கவும். சிறிது கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்