jaundice help

எனது 6 வயது மகளுக்கு மன்ச காமாலை ( jaundice) .6 மாதம் பத்தியமக சாபாடு குடுக்க வேண்டும் என்று doctors சொல்லுகிரார்கள். என்னலாம் குடுக்கலாம் என்று யாராவது help பன்னுங்களேன். இப்பொழுது வெறும் இட்லி, juice மட்டும் தான் குடுக்கிறேன்.

டியர்,
உங்கள் குழந்தைக்கு வரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்.
கொடுக்க வேண்டியதை விட, கொடுக்கக்கூடாததை தெரிஞ்சு தவிர்த்து விடுங்கள்.
எண்ணெய், நெய், வெண்ணெய், சீஸ், பன்னீர், புளி, காரம், சிக்கன், முட்டை, மீன் முதலியன முழுவதும் குணமாகும் வரை தவிர்க்க வேண்டும்.
பருப்பு, கீரை, சுத்தமாக வெண்ணெய் எடுத்த மோர், ஜூஸ், இளநீர் நிறைய கொடுக்கலாம்.
உளுந்து கூட அதிகம் சேர்க்காமல் வெந்தய இட்லி செய்து கொடுங்கள் (என்னுடைய குறிப்பில் இருக்கும்).
தண்ணீர் நிறைய கொடுங்கள். தண்ணீரை விட தண்ணீர் குடிக்க கேட்கும் போதெல்லாம் ஜூஸோ, மோரோ கொடுங்கள். எந்த அளவு நீர் போகிறதோ, அவ்வளவு சீக்கிரம் காமாலை குணமாகும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

6 வயது குழந்தைக்கு மஞ்சள் காமாலை என்று படித்ததும் மனதுக்கு கஷ்டமாக இருந்தது.
1. சாத்துக்குடி ஜூஸ் நிறைய குடுங்கள்.
2. கீரை உப்பு கம்மியாக போட்டு சீரகம் சேர்த்து வேக வைத்து மசித்து தயிர் சாதத்துடன் கொடுங்கள். சாதம் மிகவும் குழைவாக வடித்துக் கொடுங்கள்.
3. செல்வி சொன்னதுபோல் தவிர்க்க வேண்டியவற்றைத் தவிருங்கள்.
4. முக்கியமாக அவள் எதிரே நீங்கள் சாப்பிடாதீர்கள்.
அவள் சீக்கிரம் குணமடைய ப்ரார்த்திக்கிறேன்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஹாய் ஷம்மு,

உங்க குட்டி பொண்ணுக்கு சீக்கிரம் சரியாக கடவுள வேண்டிக்கறோம், சீக்கிரம் சரி ஆகிடும்

அன்புடன்

ஸ்ருதி:-)

அன்புடன்

ஸ்ருதி:-)

அனைவருக்கும் ரொம்ப நன்றி. இன்றைக்கு கீரை கொடுத்தேன். நன்றாக சாப்பிட்டாள். உங்கள் அனைவருக்கும் ரொம்ப நன்றி.

மேலும் சில பதிவுகள்