கீரை வடை

தேதி: December 20, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உளுந்து - 2 ஆழாக்கு
கடலைப்பருப்பு - 5 தேக்கரண்டி
அரைக்கீரை - ஒரு கட்டு
கொத்தமல்லி - அரை கட்டு
எண்ணெய் - 500 மி.லி
உப்பு - தேவையான அளவு


 

உளுந்தையும், கடலைப்பருப்பையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து ஆட்டவும். கீரையை பொடியாக நறுக்கி மாவில் போடவும். கொத்தமல்லியையும் பொடியாக கிள்ளி மாவில் போடவும். உப்பு சேர்த்து பிசையவும்.
ஒரு கடாயில் எண்ணெயை காயவைத்து மாவை பிசைந்து வடைகளாக தட்டி பொரிக்கவும்.


மேலும் சில குறிப்புகள்