சுறாமீன் குழம்பு

தேதி: December 21, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சுறாமீன் - 2 (1/2 கிலோ)
புளி - எலுமிச்சை அளவு
வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 3
மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் தாளித்து கறிவேப்பிலை பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கீறிய பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
பிறகு மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள் தூள் போட்டு, சோம்பு, சீரகம், மிளகு அரைத்து ஊற்றவும்.
புளியை 2 கிளாஸ் தண்ணீரில் கரைத்து ஊற்றி உப்பு போட்டு கொதிக்கவிடவும். நன்கு கொதித்த பிறகு மீனை கழுவிப்போட்டு வெந்தவுடன் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்