லெமென் ஜுஸ்

தேதி: December 22, 2007

பரிமாறும் அளவு: இரண்டு பேருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

சிறிய லெமென் - மூன்று
தண்ணீர் - இரண்டு டம்ளர்
சர்க்கரை - நான்கு தேக்கரண்டி
உப்பு - ஒரு பின்ச்
பெப்பர் - ஒரு பின்ச்


 

லெமெனை பிழிந்து சாறு எடுத்து விதையில்லாமல் வடிக்கட்டவும்.
தண்ணீரில் சர்க்கரை, உப்பு, பெப்பர் சேர்த்து நன்கு கரைத்து லெமென் சாறை ஊற்றி ஐஸ் க்யூப்ஸ் போட்டு குடிக்கவும்.


மயக்கத்தை தீர்க்கும் உடலுக்கும் மிக நல்லது.
லெமென் பிழியும் விதம் பாதியாக நறுக்கி இரண்டாக கட் பண்ணி லெமென் ஜூஸ் பிழியும் கருவி இருந்தால் ஒகே இல்லை பிழிந்து விட்டு சக்கை ஆகுகிறவரை அழுத்தி பிழியாதீர்கள். பிறகு கசக்கும். எலுமிச்சை தோலை சிங்க் மேடையை தேய்த்து கழுவும் போது தேய்த்து விட்டால் நல்ல வாசனையாக இருக்கும். ஒரு கல் உப்பும் பெப்பரும் சேர்த்து கொண்டால் ரொம்ப நல்லது. இன்னும் ஒரு ஈஸி வழி லெமென் பிழிந்து கட்டியான சாறில் சர்க்கரை கலந்து ஐஸ் க்யூப்ஸ் செய்து பிரிட்ஜில் போட்டு வைக்கவும். தேவைக்கு ஒன்று இரண்டு க்யூப் எடுத்து போட்டு தண்ணீர் கலந்து குடிக்கலாம்

மேலும் சில குறிப்புகள்