சிறு உருளை பொரியல்

தேதி: December 22, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சின்ன உருளைக்கிழங்கு - அரை கிலோ
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 தேக்கரண்டி


 

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கில் மிளகாய்ப்பொடி, உப்பு, தட்டிய சோம்பு, நசுக்கிய பூண்டு சேர்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பிசறியவற்றை போட்டு சிறு தீயில் கிளறிக்கொண்டே இருந்தால் சிவந்து வரும்.


மேலும் சில குறிப்புகள்