முட்டை பாலாடை

இஸ்லாமியர் இல்லங்களில் செய்யப்படும் முட்டை பாலாடை யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்.(அரிசி,முட்டை) கொண்டு செய்யப்படும்

அருன் குமார் நீங்க என்ன கேட்கிறீர்கள் என்று புரியவில்லை.
முட்டை பாலடை என்றால், ஒன்று முட்டை வட்லாப்பம் செய்வோம், மற்றொன்று அரிசி ஊறவைத்து முந்திரி ,பாதாம் போட்டு அரைத்து பாலில் சேர்த்து காய்ச்சி முட்டை சேர்ப்போம்.
இதை தவிர வெறு என்னது
ஜலீலா

Jaleelakamal

ஜலீலாக்கா எங்கம்மா ஒன்னு செய்வாங்க அதை முட்டை பாலாடைன்னு தான் சொல்வோம்..இனி அதான்னு தெரீல எப்படி செய்ரதுன்னும் தெரீல..மைதாவில் என்னவோ சேத்து அதுக்குன்னு இருக்கற மண்கலத்தில் முட்டையை தடவி மேலே மாவை ஊற்றி பாக்க ஆப்பம் போல ஆனா பால் ஊற்றி சாப்பிட்டா நல்லா இருக்கிஉம்.

அரிசி முட்டை சேர்த்து அரைப்பார்கள் ,அதை தோசை போல் ஊற்றி அதில் தேங்காய் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவார்கள்

அரிசி முட்டை சேர்த்து அரைப்பார்கள் ,அதை தோசை போல் ஊற்றி அதில் தேங்காய் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவார்கள்

அருன் குமார்
இது எந்த ஊர் சமையல் என்று சொல்லுங்கள்
கேட்டு தெரிந்து கொள்ளலாம். நீங்க இதை எங்கு சாப்பிட்டிர்கள்.
ஜலீலா

Jaleelakamal

எந்த ஊர் சமையல் என்று தெரியாது,பொதுவாக
இஸ்லாமியர் இல்லங்களில் செய்யப்படும் நான் ஒருமுறை என் நண்பர் வீட்டில் இதை சாப்பிட்டேன்.

http://www.arusuvai.com/tamil/node/6414

இதுவான்னு பாருங்க..இது ஒரு முறை பக்கத்து வீட்டில் வசிப்பவர் செய்து கொடுத்து பின் எங்களுக்கு பிடித்து போக அவர்களிடன் கேட்டு நாங்களும் செய்ய துவங்கினோம்..அனேகமான இதை தான் சொல்கிரீர்கள் என்று நினைக்கிறேன்...எனக்கும் இது மிகவும் பிடித்தமான ஒன்று

மேலும் சில பதிவுகள்