சிவப்புக்கீரை பொரியல்

தேதி: December 23, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிவப்புக்கீரை -- ஒரு கட்டு (சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது)
வெங்காயம் -- 1/2 கப் (பொடிதாக நறுக்கியது)
பச்சை மிளகாய் -- 2 என்னம் (நீளமாக நறுக்கியது)
உப்பு -- ருசிக்கேற்ப
தேங்காய் துருவல் -- 1/2 கப்
தாளிக்க :
எண்ணைய் -- 2 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -- 1 இனுக்கு
சிவப்பு மிளகாய் -- 1 என்னம்


 

முதலில் வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு தாளித்து சிவப்பு மிளகாய்,கறிவேப்பிலை போட்டு பின் வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்து உப்பு போட்டு ஒரு வதக்கு வதக்கவும்.
பின் சுத்தம் செய்த கீரையை போட்டு வதக்கவும்.
தேவை எனில் ஒரு கையளவு தண்ணீர் தெளித்தும் வேகவைக்கலாம்.
தண்ணீர் எல்லாம் வற்றிய பின் அடுப்பை குறைக்கவும்.
வெந்தபின் தேங்காய் துருவல் தூவி பறிமாறலாம்.
சிவப்புக்கீரை பொரியல் ரெடி


மேலும் சில குறிப்புகள்


Comments

சிவப்புக்கீரை கிடைக்கததால் பச்சைக்கீரையில் செய்தேன். நானும் இதே போல் தான் செய்வேன் மிளகாயை பொடியாக நறுக்கிப்போட்டு செய்வேன்.
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்