உருளை சிவப்புக்கீரை குருமா

தேதி: December 23, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக் கிழங்கு -- 1 என்னம் (பொடியாக நறுக்கியது)
சிவப்புக்கீரை -- 1 கட்டு (சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது)
தேங்காய் -- 1/2 மூடி
வெங்காயம் -- 1 கப் (பொடியாக நறுக்கியது)
தக்காளி -- 2 என்னம் (பொடியாக நறுக்கியது)
சீரகம் -- 1 டீஸ்பூன்
சோம்பு -- 1 டீஸ்பூன்
மிளகு -- 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி -- 2 ஸ்பூன்
தாளிக்க:
கடுகு,உளுத்தம்பருப்பு -- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -- 1 இனுக்கு


 

குக்கரில் எண்ணைய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து கறிவேப்பிலை போட்டு வெங்காயம் சேர்த்து வதக்கி தக்காளி சேர்க்கவும்.
அதனுடன் கீரை, உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.
பின் 1 கப் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி கொதிக்கவிடவும்.
பின் தேங்காய்,சீரகம்,மிளகு,சோம்பு சேர்த்து நன்கு நைசாக அரைக்கவும்.
கொதிக்கும் கலவையில் அரைத்த தேங்காய் கலவையை ஊற்றி ஒரு கலக்கு கலக்கி விடவும்.
குக்கரை மூடி 3 அல்லது 4 விசில் வந்ததும் இறக்கி குக்கரை திறந்து பறிமாறலாம்.
உருளை சிவப்புக்கீரை குருமா ரெடி.


மேலும் சில குறிப்புகள்