ஹோட்டல் வெஜ் கிரேவி

ஹோட்டலில் சப்பாத்திக்கு தரும் சைட்டிஷ் - வெஜ் கிரேவி செய்வது எப்படி என்று யாருக்காவது தெரியுமா சிஸ்டர்ஸ்!

எங்கம்மா ஆளைக் கானோம்?

நான் 'கோபி மட்டர் கறி' குறிப்பு கொடுத்திருக்கேன். ட்ரை பண்ணிபாருங்களேன் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள
அன்புடன்
ஜெயந்தி மாமி

தளிகா சிஸ்டர்,
நான் சமையல் பள்ளிக்கூடத்தில் பேபி கிளாஸ் படிக்கிற நிலா.புது....நிலா.

நீங்க எந்த நிலாவை தேடுறீங்க.வேற நிலா இருக்காங்களா.

Thanks, ஜெயந்தி சிஸ்டர்.முயற்சி செய்து விட்டு சொல்கிரேன்.

அது நிலா 2006 - நர்மதா
இது ஆயிரம் நிலா பெயர் தெரியவில்லை
அறுசுவை வானில் இப்போது இரு நிலாக்கள்
அன்புடன்
ஜெயந்தி மாமி

நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடி வா
இதய நிலா பொழிகிறது இதயம் வரை நனைகிறது.

நிலா பெண்ணே
என் குறிப்பில் உள்ள பஞ்ஜாபி சென்னா மசாலா டிரைபண்ணி பாருங்களேன் இல்லை வெஜ் வெள்ளை குருமா
ஜலீலா

Jaleelakamal

தளிக்கா இப்ப வரிங்களா கெமேரா சரியாக இல்லை கீழே வச்சுட்டேன்
ஜலீலா

Jaleelakamal

ஹோட்டலில் உள்ள குருமா எப்படி என்று தெரியவில்லை,ஆனால் இங்கு உள்ள குருமா வகையில் நவரத்தின குருமாவை முயற்சி செய்து பாருங்களேன்.மிகவும் நன்றாக இருந்தது.

ஜலீலா,கீதா சிஸ்டர்ஸ்க்கும் Thanks.

நீங்க சொன்ன ஐட்டங்கள் எல்லாத்தையும் ட்ரை பண்ரேன் ஒவ்வொன்னா ஒவ்வொரு நாளைக்கு.
இங்க ஒரே ரெசிபி நிறைய பேர் கொடுத்திருக்கிறதால எதை சமைச்சி பார்க்கிறதுனு
புரியலை.நீங்க செஞ்சதை வச்சி சொன்னீங்கன்னா நானும் எப்படியாவது
பொழச்சிக்குவேன்,அறுசுவைய அலசி அலசி பிழிஞ்சி காய போடறதையும்
நிறுத்திக்குவேன்.மறுபடியும் வேற கேள்வியோட வந்தா பதில் சொல்வீங்களா சிஸ்டர்ஸ்.

நிலா,நான் செய்து நன்றாக வந்த குருமாவை cut,copy&paste செய்துள்ளேன்.முயற்சிக்கவும்.நான் இதில் உள்ள fruits மட்டும் சேர்க்கவில்லை.நவரத்ன குருமா

தேவையானப் பொருட்கள்

* காளிஃப்ளவர் - 100 கிராம்
* காரட் - 100 கிராம்
* பட்டாணி - 200 கிராம்
* உருளைக்கிழங்கு - 200 கிராம்
* பீன்ஸ் - 50 கிராம்
* பொடியாக நறுக்கிய அன்னாசிப்பழம் - அரை கப்
* திராட்சை பழம் - 100 கிராம்
* முந்திரிப்பருப்பு - 10
* எலுமிச்சம் பழம் - அரை கப்
* தேங்காய் - ஒரு மூடி
* பெரிய வெங்காயம் - ஒன்று
* பச்சைமிளகாய் - 6
* கொத்தமல்லி - 3 தேக்கரண்டி
* பெருஞ்சீரகம் - அரை தேக்கரண்டி
* கசகசா - ஒரு மேசைக்கரண்டி
* கிஸ்மிஸ் - ஒரு மேசைக்கரண்டி
* எண்ணெய் - கால் குழிக்கரண்டி
* உப்பு - சிறிது
* மல்லிச்செடி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
* தயிர் - ஒரு கப்
* மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

செய்முறை

* காய்கறிகளை கழுவி சுத்தம் செய்து பொடியாக ஒரே அளவாக வெட்டவும்.
* அன்னாசிப் பழங்களை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
* தேங்காயை சில்லாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
* மிக்ஸியில் தேங்காய் சில் ஒன்றையும், முந்திரிப்பருப்பையும் போட்டு தனியாக அரைத்து எடுக்கவும்.
* பச்சைமிளகாய், பெருஞ்சீரகம், கசகசா, ஆகியவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
* குக்கரில் எண்ணெய் விட்டு முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் பழம், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
* அத்தோடு அரைத்த மசாலையும், காய்கறிகளையும் போட்டு வதக்கி அரைத்த தேங்காய், முந்திரிப்பருப்பை சேர்த்து வேக வைக்கவும்.
* நன்கு குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய மல்லித் தழையைத் தூவி எலுமிச்சம் பழம் பிழிந்து இறக்கவும்.
* பிறகு குருமா சிறிது ஆறியதும் வெட்டி வைத்த அன்னாசி பழங்களைச் சேர்த்து பரிமாறவும்.

random food image

மேலும் சில பதிவுகள்