தேவையானப் பொருட்கள்
- அவரைக்காய் - 1/4 கிலோ
- உருளைக்கிழங்கு (பெரியது)- 1
- சேனைக்கிழங்கு - 1 துண்டு
- கத்தரிக்காய் - 1
- வாழைக்காய் - 1
- ஓமம் - 1 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- வெந்தயக்கீரை - ஆய்ந்து நறுக்கியது - 1 கப்
- கோதுமை மாவு - 1 கப்
- கடலை மாவு - 1/4 கப்
- பச்சை மிளகாய் - 4
- இஞ்சி துருவல் - 2 டீஸ்பூன்
- சர்க்கரை - 1 டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
- கரம் மசாலா பொடி - 1/4 டீஸ்பூன்
- எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
- தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
- கொத்தமல்லித் தழை
|
செய்முறை
- 1. ஒரு பாத்திரத்தில் வெந்தயக் கீரை, கோதுமை மாவு,கடலை மாவு, 2 பச்சை மிளகாய் (நறுக்கியது), இஞ்சித் துருவல் 1 டீஸ்பூன், சர்க்கரை, எலுமிச்சை சாறு, கரம் மசாலா தூள், உப்பு, எண்ணெய் சிறிது சேர்த்து தண்ணீர் விட்டுப் பிசைந்து எண்ணெய் தடவிய தட்டில் ஊற்றி குக்கரில் வேக வைத்து ஆற வைத்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
- 2. தேங்காய், கொத்தமல்லி, பச்சை மிளகாய் 2, இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- 3. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் 1 ஸ்பூன் விட்டு நறுக்கிய (சற்று பெரிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்) காய்களைப் போட்டு ஓமம், உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
- 4. வெந்ததும் அரைத்த மசாலா, வேக வைத்த துண்டுகள் போட்டுக் கிளறி சேர்ந்து வந்ததும் இறக்கி பச்சைக் கொத்துமல்லி தூவி பரிமாறவும்.
|
வழங்கியவர்
T S JAYANTHI CHENNAI 600 048
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
6 நபர்கள் |
30 நிமிடங்கள் |
15 நிமிடங்கள் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
22 நிமிடங்கள் 22 நொடிகள் முன்பு -
26 நிமிடங்கள் ஒரு நொடி முன்பு -
26 நிமிடங்கள் 7 நொடிகள் முன்பு -
3 மணிநேரம் 12 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 36 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 54 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்பு -