கோபி மட்டர் கறி

தேதி: December 24, 2007

பரிமாறும் அளவு: 5 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காலி பிளவர் - 1
பச்சைப் பட்டாணி - 1 கப்
மசாலா இலை - 2
தக்காளி அரைத்தது - 1/4 கப்
புளிக்காத தயிர் - 4 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

அரைக்க
வெங்காயம் - 1
தேங்காய் துருவல் - 1/4 கப்
கிராம்பு - 2
பூண்டு - 2 பல்
கசகசா, தனியா - தலா 1 டீஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
காய்ந்த மிளகாய் - 4
சர்க்கரை - 1/4 டீஸ்பூன்


 

காலி பிளவரை உதிர்த்து உப்புத் தண்ணீரில் போட்டு எடுத்து வைக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை அரைத்துத் தனியாக வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காலி பிளவர், பச்சைப் பட்டாணி போட்டு வதக்கி சிறிது தண்ணீர் விட்டு வேக வைத்து எடுத்து வைக்கவும்.
வாணலியில் என்ணெய் விட்டு, மசாலா இலைகளைப் போட்டு அரைத்த விழுதைப் போட்டு வதக்கி, தக்காளி விழுது, தயிர், வெந்த காலி பிளவர், பட்டாணி, சர்க்கரை, கொஞ்சம் தண்ணீர், உப்பு சேர்ந்து வந்ததும் இறக்கி பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அப்பா ஜெ எப்படி தான் வெங்காயமே அதிகம் சேக்காமல் சமையல் செய்ரீங்களோன்ன்ய் நெனச்சுட்டிருந்தேன்..இதுல வெங்காயம் இருக்கு.:-)

வெங்காயம், பூண்டு எல்லாம் சேர்ப்பேன். ஆனா மைல்டாதான். ரொம்ப மசாலா வாசனை என்னமோ பண்ணும். என்னுடைய ஒரு பழைய பாஸ் முஸ்லீம்தான். ஆனா அவர் எங்க போனாலும் தயிர் சாதம்தான் சாப்பிடுவார். கேட்டா வயிற்றுக்கு கேடு செய்யாது என்பார். உங்க பாஸையும் உங்க வழிக்கு கொண்டு வந்துட்டீங்களான்னு எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க. சின்ன வயசிலே எங்க வீட்டிலே எல்லாம் வெங்காயம் ரொம்ப ரேர். பூண்டு சமைச்சு பார்த்ததே இல்லை. ஆனா மாமியார் வீட்டிலே தஞ்சாவூரில் ஹோட்டல் வைத்திருந்தார்கள் 30 வருடங்களுக்கு முன்பு. அதனால் வீட்டு சமையலில் வெங்காயம், பூண்டு இருக்கும். நாந்தான் திருமண நாள் முதலே தனிக் குடித்தனம். அதனால் எல்லாம் என் இஷ்டம்தான்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

தளிகா சிஸ்டர்,
நான் சமையல் பள்ளிக்கூடத்தில் பேபி கிளாஸ் படிக்கிற நிலா.புது....நிலா.

நீங்க எந்த நிலாவை தேடுறீங்க.வேற நிலா இருக்காங்களா.

என்னால் ஹோட்டல் வெஜ் கிரேவி யில் பதிவு போட முடியல.அதனால் தான் இங்கே.

Thanks, ஜெயந்தி சிஸ்டர்.முயற்சி செய்து விட்டு சொல்கிரேன்.

ஜெ மாமி நானும் கண்டு கொண்டேன் உங்க கோபி மட்டரை அடுத்த முறை செய்து பார்க்கிறேன்.
இன்று மேத்தி ரோட்டிக்கு சைட் டிஷ் செய்தாச்சு
ஓ த்ஞ்சாவூரில் ஹோட்டலா அதான் நல்ல குறிப்பு வெளுத்து வாங்குகிறீர்களா
அப்ப உங்க சமையல் செய்து பார்த்தால் ஹோட்டலில் சாப்பிட்டா ருசி கிடைக்கும்.

ஜலீலா

Jaleelakamal

நல்லா இருக்கீங்களா?ரொம்ப நாளாசு பேசி!
மசாலா இலைகள் என்றால் என்ன?

இப்பதான் கோபி மட்டர் கறி செய்து சப்பாத்தியுடன் சாப்பிட்டோம். ரொம்பவும் நன்றாக இருந்தது.

என் மருமகள் உங்களை ரயில் நிலையத்தில் பார்த்து, பேசியதாகக் கூறினார்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

ரொம்ப நாள் பென்டிங். இன்று ஜெ மாமியின் கோபி மட்டர் செய்தேன் ரொம்ப நல்ல சுவை. தேங்ஸ் மாமி!!!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..