சிம்பிள் உருளை சப்ஜி

தேதி: December 24, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - பெரியது 2
கடுகு, சீரகம், மிளகாய் தூள் - தலா 1/2 டீஸ்பூன்
தனியா தூள், சீரகப்பொடி, சர்க்கரை- தலா 1டீஸ்பூன்
பெருங்காயம் - 2 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - 1 துண்டு
தக்காளி - 1
கொத்தமல்லித் தழை - சிறிது
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


 

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டு போட்டு வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், பச்சை மிளகாய், இஞ்சி போட்டு வதக்கவும்.
தக்காளி சேர்த்து வதக்கி, வெந்த உருளைக்கிழங்கு, தனியா பொடி, சீரகப் பொடி, சர்க்கரை, உப்பு சேர்த்துக் கிளறவும்.
நன்கு கிளறி இறக்கி கொத்துமல்லித் தழை சேர்த்துப் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஜெமாமி உருளை சப்ஜி என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
நன்றீ.

சவுதி செல்வி

ஜெயந்தி மாமி நலமா? நேற்று மதியம் உங்க மெனுதான். இந்த உருளைசப்ஜி மிகவும் நன்றாக இருந்தது. நன்றி.உங்க குறிப்பிலிருந்து 3 குறிப்புகள் செய்துபார்த்தேன். 3ம் நல்ல டேஸ்டாக இருந்தது.இத்துடன் சேர்த்து பின்னூட்டமும் கொடுத்துள்ளேன். நன்றி. அன்புடன் அம்முலு.

இன்றைக்கு சிம்பிள் உருளை சப்ஜி செய்தேன் மாமி, நான் தனியாத்தூள் சீரகத்தூள் போட்டு செய்ததில்லை,இது கொஞ்சம் வித்தியாசமான டேஸ்டா இருந்தது நன்றி மாமி.

இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. நர்மதா அவர்கள் தயாரித்த சிம்பிள் உருளை சப்ஜியின் படம்

<img src="files/pictures/aa187.jpg" alt="picture" />