கீரை மசூர்தால்

தேதி: December 24, 2007

பரிமாறும் அளவு: 3 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மசூர்தால் - 1 கப்
பாலக் கீரை - 1 கட்டு
வெந்தயக்கீரை, கொத்தமல்லிக்கீரை ஆய்ந்து சுத்தம் செய்து நறுக்கியது - தலா 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
கிராம்பு - 2
பூண்டு- 3 பல்
இஞ்சி - 1 துண்டு
சீரகம் - 1/2 டீஸ்பூன்
ஆம்சூர் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு


 

மசூர் பருப்பை அரை மணி ஊற வைத்து குழைய வேக வைக்கவும்.
வாணலியில் நெய் விட்டு, வெங்காயம், கிராம்பு, பூண்டு, பச்சை மிளகாய், மன்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி, சீரகம் சேர்த்து வதக்கி நறுக்கிய கீரைகள், தக்காளி சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் வெந்த பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறி, ஆம்சூர் பொடி சேர்த்து, சேர்ந்து வந்ததும் இறக்கி பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

என்னிடம் மசூர் தால் இருந்தது,பாலக்கீரைதான் இங்கு அதிகம் கிடைக்கும்.எனவே செய்து பார்த்தேன்,வெந்தயக்கீரை,மல்லிக்கீரை சேர்க்கலை.நல்ல இருந்தது.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மாமி,
இன்று உங்க கீரை மசூர்தால் செய்தேன். நான் வெறும் பாலக் கீரை (அதுதான் என்னிடம் இருந்தது) மட்டும்தான் வைத்து செய்தேன். ரொம்ப நல்லா இருந்தது. ஆம்சூர் பவுடர் போட்டது ஒரு நல்ல டிஃபரெண்ட் டேஸ்டில் சுவையாக இருந்தது. குறிப்புக்கு ரொம்ப நன்றி மாமி!

அன்புடன்
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ