பூரிக்கிழங்கு

தேதி: December 25, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

உருளைக்கிழங்கு - கால் கிலோ
பெரியவெங்காயம் - 3
பச்சைமிளகாய் - 5
இஞ்சி - பின்ச் அளவு
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிது
எண்ணெய் - 2 தேக்கரண்டி
மஞ்சள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரிக்கவும். வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கை தோலுரித்து மசித்து மஞ்சள் தூள் சேர்த்து பிசையவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, கடலைப்பருப்பை பொரியவிட்டு பொடியாக நறுக்கியவற்றை போட்டு, கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து வதக்கவும்.
பிறகு பிசறிய உருளைக்கிழங்கு போட்டு கிளறி ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு கொதித்தவுடன் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்