தோசை

தேதி: December 25, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புழுங்கல் அரிசி - 4 ஆழாக்கு (800 கிராம்)
பச்சரிசி - 1/2 ஆழாக்கு (100 கிராம்)
உளுந்து - 1/2 ஆழாக்கு (100 கிராம்)
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி


 

அரிசி இரண்டையும் ஒன்றாக 3 மணி நேரம் ஊற வைக்கவும். உளுந்தையும், வெந்தயத்தையும் ஒன்றாக 15 நிமிடம் ஊற வைக்கவும்.
இரண்டையும் தனித்தனியாக ஆட்டி உப்பு சேர்த்து ஒன்றாக கரைக்கவும்.
மறுநாள் காலையில் தண்ணீர் தேவையானால் ஊற்றி கலக்கி தோசை ஊற்றினால் சுவையான தோசை தயார்.


இந்த தோசை சாப்பிட நன்றாக இருக்கும். முன் குறிப்பில் கூறியுள்ள உருளை மசாலாவை திக்காக கிளறி தோசையை ஊற்றி மேலே மசாலாவை வைத்து எண்ணெய் ஒரு தேக்கரண்டி விட்டு மடித்து எடுத்தால் சுவையான மசால் தோசை.

மேலும் சில குறிப்புகள்