தேவையான பொருட்கள்
- புழுங்கல் அரிசி - 1 படி(குண்டு அரிசி)
- கோழி இறக்கை பகுதி - 1 கிலோ (chicken wings)
- பெரிய இறால் - 1/2 கிலோ
- பீஃப் - 1/4 கிலோ (beef)
- மட்டி - 200 கிராம்
- குடை மிளகாய் (மஞ்சள்,சிகப்பு,பச்சை கலர்) - 1 வீதம்
- பல்லாரி வெங்காயம் - 2
- மிளகாய் தூள் - 1 தே.க
- chicken cubes - 6
- மஞ்சள் தூள் - 1/2 தே.க
- மிளகு தூள் - 3 தே.க
- எண்ணெய் - தே.அளவு
- உப்பு - தே.அளவு
|
செய்முறை
- முதலில் கோழி இறக்கைகளை சுத்தம் செய்து ,மேலே கத்தியால் கீரல் விட்டு ,சிக்கன் க்யூப் மூன்றை எடுத்து நொருக்கி கோழியின் மீது தடவி அப்படியே 1/2 மணி நேரம் வைத்து விடவும்.
- பிறகு மட்டியை சுத்தம் செய்து மட்டி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
- மட்டி திறந்து கொள்ளும்.அதில் உள்ள சதை பகுதியை எடுத்து தனியே வைக்கவும்.
- பீஃபில் உப்பு,மிளகு தூள் சேர்த்து பிசைந்து வைக்கவும்.
- இறாலை தோல் உரித்து வைக்கவும்.
- ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி கோழியை பொரித்து எடுக்கவும்.
- அந்த எண்ணெயில் மட்டியையும்,இறாலையும் பொரித்து எடுக்கவும்.
- பிறகு ஒரு பெரிய சட்டியில் கோழி பொரித்த எண்ணெய்யை ஊற்றி வெங்காயம்,குடை மிளகாய் போட்டு வதக்கவும்.
- கொஞ்சம் வதங்கியவுடன் மிளகாய் தூள்,மஞ்சள் தூள் போடவும்.
- அதனுடன் 3 சிக்கன் க்யூபை போடவும்.
- அதில் பீஃபை போட்டு வதக்கவும்.பிறகு அதில் 2 படி தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும்.
- தண்ணீர் கொதிக்கும் போது அரிசியை கழுவி போடவும்.அவ்வப்போது கிண்டிக்கொண்டே இருக்கவும்.
- சாதம் 3/4 பதம் வெந்ததும் பொரித்து வைத்துள்ள கோழி,இறால்,மட்டி இவைகளை போட்டு சாதத்துடன் சேர்த்து கிளரவும்.
- இப்போது அடுப்பை மெதுவாக வைக்கவும்.
- சாதம் தண்ணீர் இல்லாமல் சரியான பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.இப்போது சுவையான பாய்லா தயார்.
|
குறிப்பு:
குழையாத புழுங்கல் அரிசியை பயன்படுத்தவும்.சாதம் உதிரி,உதிரியாக இருக்க வேண்டும்.ckicken cubes பயன் படுத்துவதால் உப்பை பார்த்து போடவும்.
வழங்கியவர்
rasia_nisrina
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
10 நபர்கள் |
40 நிமிடங்கள் |
40 நிமிடங்கள் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
8 நிமிடங்கள் 29 நொடிகள் முன்பு -
12 நிமிடங்கள் 33 நொடிகள் முன்பு -
17 நிமிடங்கள் 57 நொடிகள் முன்பு -
43 நிமிடங்கள் 45 நொடிகள் முன்பு -
46 நிமிடங்கள் 31 நொடிகள் முன்பு -
58 நிமிடங்கள் 2 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 24 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 31 நிமிடங்கள் முன்பு -