புட்டரிசி வெல்ல தோசை

தேதி: December 26, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புட்டரிசி - 1 கப்
துருவிய தேங்காய் - 1/4 கப்
வெல்லம் - 1/4 கப்
நெய் - தேவையான அளவு


 

புட்டரிசியை அலம்பி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு கரைத்துக்கொள்ளவும்.
அரிசியையும் தேங்காயையும் சேர்த்து மைய அரைக்கவும்.
அரை பட்டதும் வெல்லத்தண்ணீரை வடிகட்டி சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து ஒருமணி நேரம் வைக்கவும்.
பிறகு தோசைக்கல்லைப் போட்டு சிறு தோசைகளாக ஊற்றி நெய் விட்டு வெந்ததும் திருப்பிப்போட்டு ஒரிரு நிமிடங்களில் எடுத்து விடவும்.
சூடாக பரிமாற வேண்டும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஜெயந்தி மாமி நலமா? புட்டரிசின்னா எது? பிரவுன் கலரா இருக்குமே அதுவா?இல்ல உடைத்த அரிசி குருனையா?

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.