கேழ்வரகு ரொட்டி

தேதி: December 26, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கேழ்வரகு மாவு - 2 கப்
தேங்காய் - அரை மூடி
வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு
முருங்கைக்கீரை - அரை கப்
எண்ணெய் (அ) நெய் - தேவையான அளவு


 

மாவுடன் உப்பு, தேங்காய்ப்பூ (விரும்புபவர்கள் பல்லு பல்லாக நறுக்கியும் சேர்க்கலாம்.) பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், முருங்கைக்கீரை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து பிசையவும்.
பிசைந்த மாவு கெட்டியாக இருக்க வேண்டும். தோசைக்கல்லை சூடாக்கி மாவை கையில் எடுத்து தட்டி சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பிப்போட்டு வெந்தவுடன் எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சரஸ்வதி ஆன்டி,

நான் இதை செய்து பார்த்தேன். தேங்காய் போடவில்லை. ஆனாலும் நன்றாக இருந்தது. நன்றி.