தக்காளி சூப்

தேதி: December 26, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துவரம்பருப்பு - 100 கிராம்
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு, சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 150 கிராம்
பச்சைமிளகாய் - 5
பூண்டு - 4 பல்
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
பட்டை- 1, கிராம்பு - 1, அன்னாசிப்பூ - சிறிது, இலை - சிறிது
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

குக்கரில் பருப்பு, பூண்டு, மஞ்சள் தூள், சோம்பு, சீரகத்தூள் ஆகியவற்றுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி 3 விசில் வைத்து சிறு தீயில் 10 நிமிடம் வைத்து வேகவிடவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சைமிளகாய், நறுக்கிய தக்காளி போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் பருப்பை மசித்து ஊற்றி மேலும் 3 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். கொதித்தவுடன் மிளகுத்தூள் தூவி இறக்கவும்.


இந்த சூப்பை சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம். சூப்பாகவும் குடிக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

சரஸ்வதி அக்கா தக்காளி சூப் சூப்பர் படம் அனுப்புகிறேன்.காலைல குடிக்கலாம்தானே?

சுரேஜினி