பாசிப்பருப்பு பாயசம்

தேதி: December 26, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பாசிப்பருப்பு - அரை கப்
ஜவ்வரிசி - 2 மேசைக்கரண்டி
வெல்லம் - ஒரு கப்
சர்க்கரை - 2 மேசைக்கரண்டி
தேங்காய்துருவல் - ஒரு கப்
தேங்காய்பால் - ஒரு கப்
ஏலக்காய் - 4
முந்திரிப்பருப்பு - 8
நெய் - தேவையான அளவு


 

பாசிப்பருப்பை வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை வறுத்த பின் அடுப்பை அனைத்து விட்டு அந்த சூட்டில் ஜவ்வரிசியை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
பின் தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.
தேங்காய்துருவலை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தோடு சிறிது தண்ணீர் விட்டு காய்ச்சவும். வெல்லம் கரைந்த பின் கனமான பாத்திரத்தில் வடிகெட்டி பாகு காய்ச்சவும்.
வெல்லம் நன்கு முறுகிய பின் வேகவைத்த பருப்பு, ஜவ்வரிசி, சிறிது நெய் விட்டு கிளறவும்.
பின் சர்க்கரை, தேங்காய் விழுது சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்.
பாயசம் கெட்டியான பின் தேங்காய்பால், தட்டிய ஏலக்காய், நெய்யில் வறுத்த முந்திரி கலந்து இறக்கவும்.


இதை பொடியாக நறுக்கிய வாழைப்பழம் அல்லது இனிப்பு பூந்தி தூவி சாப்பிடவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

முத்துலக்ஷமி,இன்று உங்கள் பாயாசம் செய்தேன்.அருமையாக இருந்தது.நாங்கள் ஜவ்வரிசி,தேங்காய்ப்பால் சேர்க்காமல் செய்வோம்.புதுவிதமாக செய்தது மிகவும் அருமையாக இருந்தது.நன்றி முத்துலக்ஷமி.

அன்புடன்
நித்திலா