பிரண்டைத் துவையல் -2

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிறிய பிரண்டை துண்டு - 8
உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
மிளகாய்வற்றல் - 5
எள் - ஒரு தேக்கரண்டி
வெல்லம் - சிறிதளவு
துருவிய தேங்காய் - 3 தேக்கரண்டி
புளி - ஒரு கொட்டைப்பாக்கு அளவு
மிளகு - அரை தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி


 

வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் எள்ளை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, மிளகாய், மிளகு போட்டு வறுத்து எடுத்து விட்டு அதே வாணலியில் பிரண்டையையும் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
மிக்ஸியில் பிரண்டை, எள்ளு, உளுத்தம்பருப்பு, மிளகாய், மிளகு போட்டு அரைத்து விட்டு அதனுடன் தேங்காய், புளி, உப்பு சேர்த்து அரைக்கவும்.
முக்கால் அளவு அரைந்தவுடன் வெல்லம் சேர்த்து நன்றாக அரைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்