பக்கோடா குருமா

தேதி: December 27, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலைப்பருப்பு - 100 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 5
மல்லித்தழை - சிறிது
உப்பு - ஒரு தேக்கரண்டி
சோடா உப்பு - பின்ச் அளவு
குருமா தயாரிக்க:
தேங்காய் - ஒரு மூடி
பொட்டுக்கடலை - 50 கிராம்
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 6
மல்லித்தழை - ஒரு கப்
தயிர் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 200 மி.லி
தாளிக்க:
சோம்பு - அரை தேக்கரண்டி
பட்டை - ஒன்று
கிராம்பு - ஒன்று
வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 3


 

கடலைப்பருப்பை 1/2 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடிகட்டியில் வடித்து விட்டு, உப்பு சேர்த்து அரைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி, பச்சைமிளகாயை வட்டமாக பொடியாக நறுக்கி, பொடியாக கிள்ளிய மல்லி ஆகியவற்றை கடலை மாவுடன் சேர்த்து பிசைந்து, ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கிள்ளிப்போட்டு பாதி வெந்தவுடன் எடுக்கவும்.
தேங்காயை துருவி, பச்சைமிளகாய், சோம்பு, பொட்டுக்கடலை, மல்லித்தழை ஆகியவற்றை அரைக்கவும்.
வேறு கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க உள்ளவற்றை போட்டு பொரிந்தவுடன் வெங்காயம், பச்சைமிளகாய் வதக்கி, அரைத்த மசாலாவையும் வதக்கி 3 கிளாஸ் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
நன்கு கொதித்தவுடன் கீழே இறக்கி வைத்து பக்கோடாக்களை போட்டு தயிரை ஊற்றி முடவும்.


மேலும் சில குறிப்புகள்