சிக்கன் ஜிஞ்சர் ப்ரை

தேதி: December 28, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கன் - அரை கிலோ
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 5 பல்
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகு, சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 200 மி.லி


 

கோழியை சிறு துண்டுகளாக்கி மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு, சீரகத்தூள், உப்பு, இஞ்சி பூண்டு சேர்த்து அரைத்த விழுது ஆகியவற்றை சேர்த்து பிசறி அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் 5 (அ) 6 துண்டுகளாக போட்டு பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்