சிக்கன் சாப்ஸ்

தேதி: December 28, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கன் எலும்பில்லாமல் - அரை கிலோ
பச்சைமிளகாய் - 6
இஞ்சி - ஒரு அங்குலம்
பெரிய வெங்காயம் - ஒன்று
முட்டை - 2
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 50 மி.லி


 

பச்சைமிளகாய், இஞ்சி, வெங்காயம் ஆகியவற்றை அரைத்து சிக்கனில் பிசறி, அடிகனமான பாத்திரத்தில் பிசறிய சிக்கனை போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
வெந்தவுடன் சிறு தீயில் சுருள விடவும். ஒரு கிண்ணத்தில் முட்டையை நன்கு அடித்து மிளகுத்தூள், அரை தேக்கரண்டி உப்பு போட்டு நன்கு கலக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சிக்கனை முட்டையில் முக்கி எடுத்து சூடாக்கிய எண்ணெயில் போட்டு சிறு தீயில் பொரிக்கவும். ஒரு முறைக்கு நான்கைந்து துண்டங்களாக போட்டு பொரிக்கலாம்.


மேலும் சில குறிப்புகள்