ஆப்பிள் ஸ்வீட் பொடேட்டோ (6+ மாத குழந்தைகளுக்கு)

தேதி: December 28, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - ஒன்று
வேகவைத்து மசித்த ஆப்பிள் - ஒன்று


 

சர்க்கரை வள்ளிக்கிழங்கை நன்கு கழுவி மண் இல்லாது வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
மசித்த கிழங்கு, ஆப்பிள் இரண்டையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து அடிக்கவும்.
தேவையான திக்னெஸ் கிடைத்ததும் குழந்தைக்கு ஊட்டவும். அளவாக மீதம் வராமல் செய்யவும்.
அதற்கு வேக வைத்த ஆப்பிள் 1/4 பாகமும், கிழங்கு 1/4 பாகமும் சேர்த்து அடித்தால் போதும் மீதத்தை ஃப்ரிட்ஜில் வைத்து தேவைக்கு அடிக்கவும்.


சர்க்கரைவள்ளிக் கிழங்கு குழந்தைக்கா என்று யோசிப்பவர்கள் உண்டு. அதிகப் படியான நியூட்ரியன்ஸ் அடங்கியது. சுவையும் குழந்தைக்கு பிடிக்கும் ஆப்பிளுக்கு பதில் பருப்பு வேக வைத்தது/பட்டாணி கடலை வேக வைத்தது சேர்த்தும் அடிக்கலாம். சத்தான உணவு குழந்தைக்கு.

மேலும் சில குறிப்புகள்