மஷ்ரூம் மிளகு வறுவல்

தேதி: December 28, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மஷ்ரூம் - கால் கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மல்லிப்பொடி - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போகும் வரை வதக்கவும்.
அதில் பொடியாக நறுக்கிய தக்காளி போட்டு வதக்கி, மஷ்ரூம் சேர்த்து நன்கு வதக்கிய பின் மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து கிளறி அரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதித்து வற்றியவுடன் கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்