தேவையானப் பொருட்கள்
- பெரிய பாகற்காய் =2
- மிளகாய்பொடி =1தேக்கரண்டி
- உப்பு =தேவையானது
- சோளமாவு =1தேக்கரண்டி
- இஞ்சி, பூண்டு விழுது =1ஸ்பூன்
- எண்ணை =தேவையானது
செய்முறை
- பாகற்காயை வட்டமாக லேசாக நறுக்கி, உப்பு, மிளகாய்பொடி, சோளமாவு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிசறி 10நிமிடம் வைத்து, ஒரு கடாயில் எண்ணை விட்டு பாகற்காயை கொஞ்சம் கொஞ்சமாக உதிர்த்து விட்டு சிவந்தவுடன் எடுக்கவும்.