புடலங்காய் துவையல்

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புடலங்காய் - ஒன்று
துவரம் பருப்பு - 100 மில்லி
உளுந்தம்பருப்பு - 50 கிராம்
வற்றல் - 4
மிளகு - 6-8
பெருங்காயம் - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப


 

புடலங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கழுவி விட்டு வாணலியில் போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
பிறகு அதே வாணலியில் துவரம் பருப்பு, உளுந்தம்பருப்பு, வற்றல், மிளகு போட்டு தனித்தனியாக எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் அனைத்தையும் போட்டு அதோடு புடலங்காயை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில், அரைத்தவற்றை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்துத் வதக்கிக் கெட்டியானதும் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்