போகா பாத்

தேதி: December 30, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

அவல் - 200 கிராம்
உருளைக்கிழங்கு - 100 கிராம்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சைமிளகாய் - 5
உப்பு - தேவையான அளவு
வேர்க்கடலை - 2 தேக்கரண்டி
தேங்காய்பூ - அரை கப்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - துளி
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
சீரகம் - அரை தேக்கரண்டி


 

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், பெருங்காயம் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
அதனுடன் உப்பு, பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கை போட்டு 2 நிமிடம் மூடி வதக்க வேண்டும்.
சிறிது வதங்கியவுடன் வேர்க்கடலை போட்டு சர்க்கரையை சேர்த்து கிளறி அவலை போட்டு கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு நன்கு கிளறி தேங்காய்ப்பூ கொட்டி கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்