சப்பாத்தி

தேதி: December 30, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

கோதுமை மாவு - இரண்டு டம்ளர்
உப்பு - அரை தேக்கரண்டி
வெந்நீர் - ஒரு டம்ளர்
நெய் - இரண்டு தேக்கரண்டி
சர்க்கரை - ஒரு பின்ச்


 

வெந்நீரில் நெய், உப்பு, சர்க்கரையை போட்டு கோதுமை மாவில் ஊற்றி ஒரு பெரிய ஃபோர்க்கால் கிளறவும்.
ஐந்து நிமிடம் கழித்து கையில் சிறிது எண்ணெயை தொட்டு கொண்டு நன்கு பிசையவும் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
பிசைந்த மாவை ஒரு கவரில் கட்டி வைக்கவும். இரண்டு மணி நேரம் கழித்து சிறு லெமென் சைஸ் உருண்டைகளாக எடுத்து மாவை தேய்த்து உள்ளங்கை அளவு வட்ட வடிவமாக இட்டு தவாவில் மிதமான தீயில் இரு பக்கமும் வெந்ததும் எடுக்கவும்.
எடுத்து குழந்தைகளுக்கு என்றால் கொஞ்சம் நெய் தடவி கொள்ளவும்.
பெரியவர்களுக்கு டயட்டில் உள்ளவர்கள் அப்படியே ஏதாவது ஒரு கிரேவியுடன் சாப்பிடவும்.


டயட்டில் உள்ளவர்கள் இந்த சப்பாத்தியுடன் பச்சடி ஏதாவது கிரேவி செய்து சாப்பிடுங்கள்.
ஹாட்பேக்கில் வைக்கும் போது அடியில் இரண்டு ஸ்பூன் (அ) ஃபோர்க்கை இன்டு ஷேப்பில் வைத்து சப்பாத்திகளை அடுக்கி வைக்கவும். அதிகம் வியர்த்து விடாமல் இருக்கும்

மேலும் சில குறிப்புகள்


Comments

ஜலீலாக்கா இந்த முறையில் சப்பாத்தி செய்தேன். ரொம்ப சூப்பரா இருந்தது.ஸாப்ட்டா இருந்தது.ரொம்ப நன்றி.
அன்புடன்
சுபு

I.Subraja

சுபு
சப்பாத்தி சூப்பர் சாஃப்ட்டா வந்ததா நான் வாரம் ஒரு முறை செய்கிறேன் இதே முறை தான், இதே கோதுமை ரொட்டியும் செய்வேன்.

பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக நன்றி.
ஜலீலா

Jaleelakamal