செட்டிநாட்டு மட்டன் பிரியாணி

தேதி: December 30, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (16 votes)

 

சீரக சம்பா அரிசி - 3 கப்
மட்டன் - அரை கிலோ
இஞ்சி - 50 கிராம்
பூண்டு - 25 பல்
பெரிய வெங்காயம் - 4
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 4
கிராம்பு - 4
பட்டை - 4 துண்டு
ஜாதிக்காய் - பாதி
ஏலக்காய் - 4
மிளகாய்தூள் - அரை தேக்கரண்டி
கரம்மசாலா - கால் தேக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி
முந்திரி - 10
தயிர் - அரை கப்
எலுமிச்சம்பழம் - ஒரு மூடி
புதினா - ஒரு கட்டு
மல்லி - ஒரு கட்டு
நெய் - அரை கப்
எண்ணெய் - அரை கப்
தாளிக்கத்தேவையானவை:
கிராம்பு - 3
பட்டை - 3 சிறிய துண்டு
ஏலக்காய் - 3
பிரிஞ்சி இலை - ஒன்று
சோம்பு - ஒரு தேக்கரண்டி


 

மட்டனில் கால் கப் தயிர், மஞ்சள்தூள் அரை தேக்கரண்டி, கரம் மசாலா, உப்பு ஒரு தேக்கரண்டி போட்டு 5 விசில் விட்டு வேக வைக்கவும்.
பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் இவற்றை நெய் விட்டு வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
பெரியவெங்காயம், சின்னவெங்காயம் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை வாயை கீறிக்கொள்ளவும். பூண்டை தனியாக அரைத்துக் கொள்ளவும்.
துருவிய தேங்காய், இஞ்சி, முந்திரி இவை மூன்றையும் சேர்த்து ஒன்றாக மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி 4 கப் பால் எடுத்து வைக்கவும். ( இந்த பிரியாணியின் விசேஷமே தேங்காயும், இஞ்சியும் சேர்த்து அரைத்து பால் எடுப்பதுதான். இதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இதனுடன் முந்திரி சேர்ப்பது ரிச்னஸ் காகத்தான். )
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து ஊற்றி காய விடவும்.
காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பிரிஞ்சி இலை, தாளிக்கவும்.
அதனோடு நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்க்கவும்.
வெங்காயம் பொன் நிறம் ஆனதும் அரைத்த பூண்டு விழுதை போட்டு வதக்கவும். இரண்டு நிமிடம் வதக்கியதும், அரைத்த பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் விழுது, மிளகாய்தூள் போட்டு வதக்கவும்.
5 நிமிடம் போல வதக்கி எண்ணெய் பிரிந்ததும் நறுக்கிய தக்காளியை போடவும். தக்காளி நன்றாக வதங்கி கூழானதும் தயிர் சேர்க்கவும்.
இப்போது எடுத்து வைத்திருக்கும் தேங்காய்பால், மட்டன் வேக வைத்த தண்ணீர் இரண்டும் சேர்த்து 6 கப் அளந்து ஊற்றவும். உப்பு, புதினா, கொத்தமல்லி சேர்க்கவும்.
ஒரு கொதி வந்ததும் அரிசியை போடவும். பிரியாணி பாதி வெந்ததும் எலுமிச்சம்பழம் பிழியவும்.
பிரியாணி நன்றாக வெந்ததும் அப்படியே மூடி வைக்கவும்.


இந்த பிரியாணி மிகவும் ருசியாகவும், மணமாகவும் இருக்கும். ஒரு தடவை இந்த பிரியாணியை வீட்டில் செய்தீர்களென்றால் பிறகு ஒவ்வொரு முறை பிரியாணி செய்யும்போது இந்த முறையில்தான் செய்யவேண்டும் என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்வார்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

i tried briyani for the first time in my life with ur recepie. it came out really well. thank u so much mam

இன்று இந்த பிரியாணி செய்தேன்.மிகவும் அருமையாக இருந்தது. நன்றி.

நேற்று மதியம் உங்களுடைய இந்த பிரியாணியை சிக்கன் வைத்து செய்தேன்.சூப்பரோ சூப்பர்.என் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள்.நன்றி
சவுதி செல்வி

சவுதி செல்வி

மாலதி அக்கா ரொம்ப அருமையான செட்டி நாடு பிரியாணி.

இன்று இறால் செய்யும் முறை ஆகையால் இதே மெத்தடில் இறாலில் செய்தேன், இது வரை தேங்காய் பால் விட்டு பிரியாணி அவ்வளவா செய்ததில்லை,சில அயிட்டத்துக்கு தான் தேங்காய் பால் சேர்த்து செய்வது.

இது மதியத்திற்கு தான் ஆனால் இப்பவே கொஞ்சம் டேஸ்ட் பார்த்து விட்டு தான் வந்தேன்.

ரொம்ப நல்ல வந்தது.பச்சமிளகாய் வாயை கீறி போட சொன்னீர்கள், ஆனால் அது ரொம்பவே அழுது விட்டது. ஹி ஹி

கூப்பிட கூப்பைட வரல ஆனால் இப்ப 10 நாள் இங்கு வந்து தான் ஆகனும்.
உங்களை இங்கு பார்ப்பதில் ரொம்ப சந்தோஷம்.

ஜலீலா

Jaleelakamal

இந்த பிரியாணி நல்ல வாசனையுடன் ருசியாக இருக்கும். செய்து பார்த்து சுவைத்து பின்னூட்டம் அனுப்பியதற்கு மிகவும் நன்றி. உங்களை எப்படி அழைப்பது? ...... நன்றிம்மா....

ஜலீலா..!! உங்களுக்கு மெயில் அனுப்பி இருந்தேனே பார்த்தீர்களா? இந்த பிரியாணியின் ஸ்பெஷலே தேங்காயும் இஞ்சியும் சேர்த்து அரைத்து பால் எடுத்து சேர்ப்பதுதான். அப்படி சேர்ப்பது நல்ல மணத்தையும் டேஸ்டையும் கொடுக்கும். ( உங்களுக்கு தெரியாததா ஜலீலா..!! நான் வெஜ் ராணியாயிற்றே நீங்க..!! ) ஈவ்னிங் போய் சாப்பிட்டு பாருங்க மசாலாவில் சாதம் நன்றாக ஊறி இன்னும் டேஸ்டாக இருக்கும். நன்றி ஜலீலா..!!

ஹாய் மாலதி,
பிரியாணியை குக்கரில் தாளித்தால் எத்தனை விசில் விட வேண்டும்.......

அன்புடன்
மகேஸ்வரி

டியர் மகேஸ்வரி

மாலதி அக்கா சொல்லி உள்ளது போல்
செய்து குக்கரில் செய்து அரிசிதட்டி நலல் கொதிகக் விடுங்கள்.
முக்கால் பாகம் கொதி வந்ததும் மூடி வெயிட் போட்டு முன்றாவது விசில் வரும் போது அடுப்பை அனைத்து வேறு இடத்துக்கு மாற்றி விடுங்கள் கேஸ் சில் உள்ள சூடு சேர்ந்து இன்னும் வெந்துவிடும் ஆவி அடங்கியதும். திறந்து பிறட்டி விட்டு வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றி விடுங்கள்,
நான் காலையில் குக்கரில் தான் செய்தேன்.

மாலதி அக்கா மெயில் பார்த்தேன் எல்லா விபரமும் தெரிந்து கொண்டேன்.
பேரன் ஸ்கூலுக்கு ரெடி ஆகி விட்டரா?

ஜலீலா

Jaleelakamal

என்னை நீங்கள் செல்வி என்றே கூப்பிடுங்கள்.
செல்வி

சவுதி செல்வி

ரொம்ப தேங்ஸ் ஜலீலா அக்கா. நான் அப்படியே செய்து பார்க்கிறேன்.

அன்புடன்
மகேஸ்வரி

மஹேஸ்..!! ஜலீலா சொல்லி இருப்பது போலவும் குக்கரில் செய்யலாம். நான் குக்கரில் செய்யும் முறையையும் சொல்கிறேன் உங்களுக்கு எது ஈஸியாக இருக்கிறதோ அதை ஃபாலோ பண்ணிக்கொள்ளுங்க. எல்லா சாமானையும் சேர்த்து தேங்காய்பால் + தண்ணீர் சேர்த்த பிறகு ஒரு கொதி வந்ததும் அரிசியை போட்டு குக்கரை மூடவேண்டும். அடுப்பை முழு ஃப்ளேமில் வைக்கவெண்டும். குக்கரில் ஸ்டீம் வர ஆரம்பித்ததும் வெயிட்டை போட்டு அடுப்பை குறைத்துவிட வேண்டும். சரியாக பத்து நிமிடங்கள் ஆனவுடன் அடுப்பை ஆஃப் செய்து விடவும் குக்கரை கீழே இறக்கி வைத்து விட்டு சூடு இறங்கியதும் திறந்து கிளறி விடவும்.

நான் அப்படியே செய்து பார்க்கிறேன்.ரொம்ப தேங்ஸ்......

அன்புடன்
மகேஸ்வரி

அதிரா..!! இந்த பிரியாணியை சீரகசம்பா அரிசியில் ஒருமுறை செய்து பாருங்களேன். இன்னும் அதிக டேஸ்டா இருக்கும். மட்டன் பீஸஸ் அதிகமாகவேப்போட்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது. அதுவே தனி சுவையை கொடுத்திருக்கும்.
நன்றி அதிரா..!!

மாலதி மேட‌ம்,

நேற்று இர‌வு உங்க‌ குறிப்பின்ப‌டி சிக்க‌ன் போட்டு பிரியாணி செய்தேன். மிக அருமையாக வந்திருந்தது. என் ப‌ச‌ங்க‌ கார‌ம் என்றாலே காத‌தூர‌ம் ஓடுவாங்க‌! :) இந்த பிரியாணி, மிக‌ச்ச‌ரியான‌ கார‌ம், ம‌சாலா வாச‌னை என்று மிக‌வும் ருசியாக‌ இருந்தது. ப‌ச‌ங்க‌ இர‌ண்டு பேருக்கும் ரொம்ப‌ பிடித்து சாப்பிட்டார்கள், நாங்களும்தான்! :) அருமையான‌ குறிப்புக்கு மிக்க‌ ந‌ன்றி!

பி.கு. குக்கரில் செய்யும் செய்முறையும் சேர்த்து சொன்னதற்கு ஒரு ஸ்பெஷல் தேங்ஸ்!. ப்ரஷர் குக்கரில் செய்யும்போது, எப்பவும் அப்படி, இப்படி என்று போகும் பிரியாணி, உங்க‌ மெத்த‌டில் ரொம்ப‌ க‌ச்சித‌மா த‌யாரான‌து!.

அன்புடன்
சுஸ்ரீ

மாலதி அக்கா உங்கள் குறிப்பிலிருந்து செட்டிநாட்டு மட்டன் பிரியாணி செய்தேன் ரொம்ப டேஸ்ட நல்ல இருந்தது மிக்க நன்றி.

என்றும் அன்புடன்,
மைதிலி.

Mb

இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. ஜலீலா அவர்கள் மட்டனிற்கு பதிலாக இறாலை வைத்து தயாரித்த பிரியாணியின் படம்

<img src="files/pictures/aa179.jpg" alt="picture" />

மைதிலி..!! பிரியாணி பிடித்து பின்னூட்டம் அனுப்பியதற்கு தேங்க்ஸ்..!!

ஜலீலா..!! பிரியாணி ஃபோட்டோ நன்றாக இருக்கிறது. பாஸ்மதி அரிசியில் செய்து இருப்பீர்கள் போல் தோன்றுகிறது. சீரக சம்பா அளவிற்கு பாஸ்மதி டேஸ்டாக இருக்குமா? நான் இதுவரையில் பாஸ்மதியில் பிரியாணி செய்ததில்லை. அதனால் கேட்கிறேன். காலையிலேயே பிரியாணியும் செய்துவிட்டு ஆஃபீஸுக்கும் புறப்பட்டுவந்துவிட்டீர்கள்......நல்ல சுறுசுறுப்பு....
நன்றி ஜலீலா..!!

ஆமாம் மாலதி அக்கா பாசுமதி அரிசி தான்.
ரொம்ப நல்ல வந்தது. பாலுடா அதற்குள் அவசர படுகிறீர்களே, போட்டோ எடுத்தாச்சு அனுப்ப தான் நேரம் இல்லை , அது கொஞ்சம் ஒவ்வொன்றிலிருந்து மாற்றி அனுப்ப கொஞ்சம் டைம் எடுக்கும்.
நாள் அல்லது பிற்கு அனுப்வுவேன்.
ஜலீலா

Jaleelakamal

மாலதியக்கா சூப்பர் பிறியாணி.
ஒன்று என்னவென்றால், ஆட்டிறைச்சி வாங்கி கறிக்காக சின்னனாக வெட்டி பிறீஸ் பண்ணியிருந்தேன் அதில்தான் செய்தேன். பிறியாணிக்கென்றால் பெரிதாகத்தானே வெட்ட வேண்டும். படம் வந்ததும் பார்த்து பதில் போடுங்கோ, இல்லாட்டில் அதிரா நொந்துபோயிடுவேன்:). தக்காளி, புதினா, மல்லி, பிரிஞ்சி இலை சேர்க்கவில்லை. கறிவேப்பிலைதான் சேர்த்தேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அது எப்படி அதிரா தக்காளி, புதினா, மல்லி, பிரிஞ்சி இலை சேர்க்காமல் பிரியாணி செய்தீர்கள்? மற்றவற்றை விடுங்க தக்காளி சேர்க்காமல் பிரியாணியா?!! ஆச்சரியமாக இருக்கே...!!! ஓகே....இருக்கும் இன்க்ரடியன்டை வைத்துக்கொண்டு சுவையாக சமைப்பதும் ஒரு கலைதான்......
படங்களை பார்த்துவிட்டு மீதியை சொல்கிறேன்...

இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. அதிரா அவர்கள் தயாரித்த செட்டிநாட்டு மட்டன் பிரியாணியின் படம்

<img src="files/pictures/aa214.jpg" alt="picture" />