முட்டை ஆம்லேட் புளிக்குழம்பு

தேதி: December 30, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முட்டை -- 2 என்னம்
சிறிய வெங்காயம் -- 10 என்னம் (பொடியாக நறுக்கியது)
சீரகம் -- 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் -- 2 என்னம் (பொடியாக நறுக்கியது)
புளி -- 1/2 கோலியளவு
நல்லெண்ணைய் -- 2 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் -- 5 என்னம்
மஞ்சள் தூள் -- 2 சிட்டிகை
உப்பு -- ருசிக்கேற்ப


 

முட்டையை உப்பு போட்டு அடிக்கவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி வெங்காயம்,பச்சைமிளகாய் போட்டு வதக்கி உப்பு போடவும்.
இதை முட்டை கலவையில் போட்டு நன்கு கலக்கவும்.
இதை தோசைக்கல்லில் போட்டு ஆம்லெட்டாக சுட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
புளியை நன்கு தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.
மிளகாய் வத்தலையும் சீரகத்தையும் நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணைய் ஊற்றி புளிக்கரைசலை ஊற்றி அதனுடன் அரைத்த கலவையை ஊற்றவும்.
உப்பு,மஞ்சள் தூள் போட்டு நன்கு கொதித்து வந்ததும் சிம்மில் வைத்து குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்கவிடவேண்டும்.
பின் நறுக்கிய ஆம்லேட் துண்டுகளை போட்டு ஒரு கிளறு கிளறி இறக்கி பறிமாறலாம்.
முட்டை ஆம்லேட் புளிக்குழம்பு ரெடி.


மேலும் சில குறிப்புகள்