முட்டை பிரட்

தேதி: December 30, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ப்ரட் -- 5 என்னம்
எண்ணைய் -- 1/2 கப்
மிளகுத்தூள் -- 2 ஸ்பூன்
உப்பு -- ருசிக்கேற்ப
முட்டை -- 3 என்னம்
பொரிகடலை -- 50 கிராம் (மாவு போல் பொடித்தது)
வெண்ணிலா எசன்ஸ் -- 1 ஸ்பூன்


 

முட்டையை உடைத்து அதனுடன் பொரிகடலை மாவு, வெண்ணிலா எசன்ஸ் ஊற்றி அதனுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணையை ஊற்றி முட்டை கலவையை தோசையாக ஊற்றவும்.
அதன் மேல் ரொட்டி துண்டை வைத்து முட்டை தோசையை மடித்து ரொட்டி துண்டு வெளியில் தெரியாதபடி செய்யவும்.
திருப்பி வைத்து பொன்னிறமாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
இது மிகவும் சுவையாக இருக்கும்.
சுவையான முட்டை ப்ரட் ரெடி.


மேலும் சில குறிப்புகள்