புதினா துவையல் - 1

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புதினா - 2 கட்டு
தேங்காய் - அரை மூடி
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 2 அரிசி
சின்ன வெங்காயம் - 5
பச்சைமிளகாய் - 6
புளி - சிறிது
உப்பு - தேவைகேற்ப


 

புதினா இலைகளை ஆய்ந்து வைத்துக் கொள்ளவும்.
தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.
பூண்டையும், வெங்காயத்தையும், தோலுரித்து விட்டு நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி, பச்சைமிளகாயை பொடி பொடியாக நறுக்கவும்.
மிக்ஸியில் பூண்டு, வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், துருவிய தேங்காய் போட்டு இவற்றுடன் உப்பு சேர்த்து அரைக்கவும்.
முக்கால் அளவு அரைந்தவுடன் புதினா இலைகளை சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்