உருளை அரைக்கீரை மசாலா

தேதி: December 31, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரைக்கீரை -- 1 கட்டு (சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது)
உருளைக்கிழங்கு -- 2 என்னம்(தோல் சீவி சதுரமாக நறுக்கியது)
வெங்காயம் -- 1/2 கப் (பொடியாக அரிந்தது)
தக்காளி -- 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சிபூண்டு விழுது -- 1 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் -- 2 (நீளமாக கீறியது)
மிளகாய்த்தூள் -- 2 டீஸ்பூன்
உப்பு --ருசிக்கேற்ப
எண்ணைய் -- 3 டேபிள்ஸ்பூன்
பட்டை -- 1அங்குலம்
சீரகம் -- 1/2 டீஸ்பூன்


 

வாணலியில் எண்ணைய் ஊற்றி வெங்காயம்,பச்சைமிளகாயை வதக்கி தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள் இவற்றை பச்சை வாசனை போகும் வரை வதக்கி உருளைக்கிழங்கை சேர்க்கவும்.
உருளைக்கிழங்கை ஒரு வதக்கு வதக்கி 1 கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்க்கவும்.
கீரையை இட்லி பாத்திரத்தில் வேகவைத்து வெந்ததும் மசித்து வைக்கவும்.
உருளைக்கிழங்கு வெந்து கொண்டிருக்கும் போது மசித்த கீரையை சேர்த்து நன்கு கிளறவும்.
வாணாலியில் எண்ணையை காயவைத்து பட்டை, சீரகம் தாளித்து கீரைக்கலவையில் சேர்த்து கிளறி இறக்கவும்.
உருளை அரைக்கீரை மசாலா ரெடி.


மேலும் சில குறிப்புகள்