பொரித்த மாசி

தேதி: December 31, 2007

பரிமாறும் அளவு: 3நபர்களுக்கு)

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

சின்ன வெங்காயம் - 150 கிராம்
மாசி தூள் - 3 மேசைக்கரண்டி
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 3/4 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி


 

வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்.
அடுப்பில் பொரிக்கும் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றவும் .
எண்ணெய் சூடானதும் அதில் வெங்காயம், நறுக்கிய தக்காளி, நீளவாக்கில் இரண்டாக அரிந்த பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, மாசிதூள், மிளகாய் தூள் அனைத்தையும் சேர்த்து பிரட்டவும்.
மிதமான தீ வைத்து வதக்கவும். இலேசாக தண்ணீர் தெளித்து வேக விடவும்
தக்காளி, வெங்காயம், மாசி மூன்றும் நன்றாக சேர்ந்ததும் இறக்கி விடவும்.


தண்ணீர் அதிகமாக சேர்க்க வேண்டாம். முடிந்த வரையில் எண்ணெயிலேயே வதக்கவும். அப்போதுதான் சுவை அதிகமாய் இருக்கும்

மேலும் சில குறிப்புகள்