வல்லாரைக்கீரை துவையல்

தேதி: December 31, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வல்லாரைக்கீரை -- 1 கப்
சின்ன வெங்காயம் -- 1 கப்
பூண்டு -- 8 பல்
தக்காளி -- 3 என்னம்
புளி -- 1 1/2 கோலியளவு
உப்பு -- ருசிக்கேற்ப
கடுகு -- 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு -- 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -- 6 என்னம்
எண்ணைய் -- 2 டேபிள்ஸ்பூன்


 

முதலில் வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு தாளித்து மிளகாய் வத்தல் போட்டு வறுத்து தனியே வைக்கவும்.
அதே வாணலியில் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி அத்னுடன் கீரையையும் வதக்கி புளி, உப்பு சேர்த்து கிளறி தனியே எடுத்து வைத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும்.
சுவையான மருத்துவ குணம் உள்ள வல்லாரைக்கீரை துவையல் ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

சுபா வல்லாரை கீரை துபாயில் எங்கு கிடைக்குது அதன் ஆங்கில பெயர் என்ன?
ஞாபக சக்திக்கு இந்த வல்லாரை கீரை மிகவும் நல்லது, சாலடாக சாப்பிட்டால் கூட ஒகே தான்.

ஜலீலா

Jaleelakamal

ஜலீலா,
நான் வல்லாரை கீரையை பர்துபாயில் கோவில்பக்கத்தில் உள்ள தமிழ் கடையில் வாங்கினேன்.
எந்தகீரையும் தமிழ் கடைகளில் சொல்லி வைத்தால் கிடைக்கும்.
மணத்தக்காளி கீரை, சிறு கீரை, முளைக்கீரை, பருப்புக் கீரை, மற்றும் கருணைக்கிழங்கு கூட கிடைக்கும்.