புதினா துவையல் - 2

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
மிளகு - கால் தேக்கரண்டி
மிளகாய்வற்றல் - 3
புளி - ஒரு கொட்டைப்பாக்கு அளவு
பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு
புதினா - 2 கட்டு
உப்பு - கால் தேக்கரண்டி


 

புதினாவை சுத்தம் செய்து ஆய்ந்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல், போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு ஆய்ந்து வைத்திருக்கும் புதினாவைப் போட்டுச் வதக்கிக் கொள்ளவும்.
மிக்ஸியில் அனைத்தையும் போட்டு அதனுடன் உப்பு, புளியோடு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.


மேலும் சில குறிப்புகள்